கழகத்தின் 28 ஆம் ஆண்டுக் கருத்தரங்கம் – நன்றி

◾ தமிழக வரலாற்றிற்கு அடிப்படைச் சான்றுகளான தொல்லியல் கல்வெட்டியல்,நாணயவியல்,ஓலைச்சுவடிகள், கோயிற் கட்டடக்கலை, சிற்பங்கள் ஆகியவற்றைத் தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தும் பணிகளை முதன்மையாக செய்யும் ஆய்வுக் கழகம் தொல்லியக் கழகம்.

◾ தென்னிந்திய வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல் ஆகிய துறைகளில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களின் முயற்சியால் 1991 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நிறுவப்பட்ட இக்கழகம் தற்பொழுது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் செயல்பட்டு வருகின்றது. தமிழகத் தொல்லியல் கழகம் என்ற பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் தொல்லியல் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது. தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் ஏறக்குறைய 1200 வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருவதால் தொல்லியல் கழகம் என்ற பெயர் மாற்றம் பொருத்தமுடையதாக அமைகின்றது.

◾ இக்கழகத்தினைத் தோற்றுவித்த பேராசிரியர்களாக பேராசிரியர் எ. சுப்பராயலு, பேராசிரியர் ப. சன்முகம், பேராசிரியர் புலவர் இராசு, கண் மருத்துவரான டாக்டர் கலைக்கோவன், மறைந்த கொடுமுடி சண்முகம், பேராசிரியர் விஜய வேணுகோபால் ஆகியோர் விளங்குவர்.

◾ இவர்களுக்கு அடுத்த நிலையில் தொடக்க நிலையில் இருந்தே பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களின் வழிகாட்டலில் கல்வெட்டியலிலும் தொல்லியலிலும் பேராசிரியர்களாகவும் ஆய்வறிஞர்களாகவும் விளங்கி வருகின்ற பேராசிரியர் க.இராஜன், பேராசிரியர் சு.இராசவேலு, பேராசிரியர் ந. அதியமான்,(மறைவு) பேராசிரியர் இல. தியாகராஜன் பேராசிரியர் ப. ஜெயக்குமார் ஆகியோரும் கல்வெட்டியல் அறிஞர்களான முனைவர் சு.இராசகோபால், முனைவர் வெ. வேதாசலம், முனைவர், சொ. சாந்தலிங்கம், ஆகியோரும் இக்கழகத்தை முன்னின்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் தொல்லியல் கல்வெட்டியல் ஆய்வில் மிகச் சிறந்த பேராசிரியர்களும் இக்கழகத்தில் வாழ்நாள் உறுப்பினர்களாக உள்ளனர்.

◾ இவர்களுடன் கல்வெட்டியல் தொல்லியல் ஆர்வலர்களும் உறுப்பினர்களாக இருந்து தொல்லியல் கழகத்தை கடந்த 30 ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக வழி நத்தி வருகின்றனர். இக்கழகத்தின் புரவலர்களாக மறைந்த கல்வெட்டியல் அறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன், பத்மஸ்ரீ தினமலர் ஆசிரியரும் நாணயவியல் அறிஞருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர். உலக அரங்கில் சிறந்த பேராசிரியர்களான ஜப்பானியப் பேராசிரியர் நபொரு கராஷிமா, தொல்லியல் பேராசிரியர் எப்.ஆர். அல்சின், ஹெர்மன் டிக்கன், சிவிலார்ட், திலிப் சக்ரவர்த்தி, முனைவர் காங்கிலி முனைவர் தயாளன், முனைவர் எம்,டி. சம்பத், இராகவ வாரியார், ராஜன்குருக்கள், முனைவர் சாந்திபப்பு, அலோக் திருப்பாதி, இலங்கைப் பேராசிரியர்கள் இந்திரபாலா, சிற்றம்பலம்,மகேஸ்வரன், பரமு புஷ்பரத்னம், கிருஷ்ண ராஜா, உதயாபிள்ளை போன்றோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

◾ இக்கழகத்தில் 1200 க்கும் மேற்பட்ட ஆர்வலர்களும் ஆசிரியப் பெருமக்களும் உறுப்பினர்களாக விளங்கி தொல்லியல் கழகத்தின் ஆவணம் இதழில் புதிய கண்டுபிடிப்புகளை ஆண்டுதோறும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

flexslider

தலைவர்

திரு. செந்தீ நடராஜன்

flexslider

துணைத்தலைவர்

முனைவர் சொ.சாந்தலிங்கம்

flexslider

செயலர்

பேரா. சு. இராசவேலு

flexslider

இணைச்செயலர்

முனைவர் வி.ப.யதீஸ்குமார்

flexslider

பொருளாளர்

முனைவர் வீ.செல்வகுமார்

flexslider

பதிப்பாசிரியர்

முனைவர் சு. இராசகோபால்

கருத்தரங்குகள்

◾ தொடக்க காலத்தில் அரைஆண்டுக்கு ஒருமுறை கருத்தரங்குகள் நடத்தப்பட்டுப் பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் கருத்தரங்குகள் நடைபெற்று அக்கருத்தரங்குகளில் படிக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் ஆவணம் இதழில் வெளிவரும். இதுவரை 30 ஆவணம் இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. கருத்தரங்குகள் நடைபெற்ற இடங்கள் பட்டியலில் அளிக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட இதழ்களும் நூல்களும்

◾ ஆவணம் என்னும் பெயரில் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்படுகின்ற கல்வெட்டுகள் தொல்லியல் இடங்கள் யாவும் இவ்விதழில் பதிப்பிக்கப்படுகின்றன. தொல்லியல் கல்வெட்டியல் குறித்த புதிய தரவுகள் ஆவணம் இதழில் முன்னுரிமை பெறுகின்றன. புதிய கண்டுபிடிப்பாளர்களையும் ஆர்வலர்களையும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தொல்லியல் கல்வெட்டுகள் தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் இவ்விதழ் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றது.

◾ இவ்விதழ் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இதழாகவும் விளங்கி வருகின்றது. இவ்வலைத்தளத்தில் ஆவணம் இதழ்களைப் பார்க்க ஏதுவாக இதழ்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை 1500 க்கும் மேற்பட்ட கல்வெட்டு தொல்லியல் தலைப்புகள் 30 இதழ்களில் வெளிவந்துள்ளன. ஆவணம் இதழின் பதிப்பாசிரியர்களாக இதுவரை இருந்தவர் பட்டியல் பின்வருமாறு

பிற வெளியீடுகள்

◾ தொல்லியல் கழகம் ஆவணம் இதழைத் தவிர பிற வெளியீடுகளையும் வெளியிட்டு வருகின்றது. இதனுடைய பொறுப்பாளர்கள் பேராசிரியர் சுப்பராயலு அவர்களுக்கு காவேரி என்ற பெயரில் முனைவர் சு. இராசகோபாலைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாராட்டு நூல் ஒன்றை வெளியிட்டது. இதில் உலகளாவிய அளவில் சிறந்த ஆய்வறிஞர்களின் சிறப்பான கட்டுரைகள் ஆங்கிலம் மற்றுய்ம் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

◾ பேராசிரியர் ப. சண்முகத்திற்கான பாராட்டு நூல் ஒன்றும் இக்கழகத்தின் உறுப்பினர்களால் வெளியிடப்பட்டன. இதன் பதிப்பாசிரியர்களாக பேராசிரியர்கள் சு. இராசவேலு. ந. அதியமான், வீ. செல்வகுமார் செயல்பட்டனர்.

◾ இவற்றைத்தவிர பேராசிரியர் எ. சுப்பராயலு அவர்களின் இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும், திரு. கோவிந்தராஜன் அவர்களின் தமிழ்நாட்டு எழுத்து வளர்ச்சி, ஆவணத்தில் இடம்பெற்ற சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கிய முருகு மற்றும் சிலையும் கலையும் ஆகிய நூல்கள் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.