தொல்லியல் கழகத்தின் நன்றி

அன்புடையீர் வணக்கம்.
வரலாற்றுப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் கழகத்தின் 27 ஆவது  கருத்தரங்கம் இனிதே நிகழ்ந்தது. கழகத்தின் ஆவணம் இதழ் 28 வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் தொல்லியல் கழகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.  இக்கருத்தரங்கை உள்ளூர் செயலராக இருந்து சிறப்புடன் நடத்திய கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் அதன்செயலர் கோமகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.  மரபுச் சின்னங்களைக் காண வழிவகுத்த பொறிஞர் கோமகன் அவர்களுக்கும் இந்தியத் தொல்லியல் துறை பராமரிப்புக் காவலர் திரு ஜோதி (கங்கைகொண்ட சோழபுரம்) ஆகியோருக்கு கழகம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்திய பேராசிரியர் கா. இராஜன், வரலாற்றுத்துறை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்  முனைவர் தி.சுப்பிரமணி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை  உதவி இயக்குநர் ஓய்வு மற்றும் கட்டுரைகள் வாசித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. இவ்விழாவில் பல நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியிட்ட நூலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

அடுத்த ஆண்டு தொல்லியல் கழகத்தின் 29 ஆவது கருத்தரங்கம் திருவண்ணாமலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

அன்புடன்

சு. இராசவேலு
செயலர்