அறிவிப்பு

கல்வெட்டுப் பயிற்சி அறிவிப்பு

அறிவிப்பு – நாள் 14-07-2018

கல்வெட்டுப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பெற்றவர்கள் 17-07-2017 அன்று காலை 9.30 மணியளவில் பயிற்சிக்கு நேரில் வந்து தங்கள் வருகையைப் பதிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.இதுவரை வங்கியில் கட்டணம் செலுத்த இயலாதவர்கள் நேரில் தங்கள் கட்டணத்தை செலுத்தலாம். தங்கும் மண்டபம்/அறைகள் வகுப்புகள் நடைபெறும் இடம் ஆகியவற்றை அறிய உள்ளூர் செயலர் திரு. பாலமுருகன் -9047578421அவர்களைத் தொடர்பு கொள்ளவும். வகுப்புகள் 17-07-2018 அன்று காலை 10 மணியளவில் தொடங்கும். எனவே காலையில் முன்கூட்டியே திருவண்ணாமலைக்கு வந்து பயிற்சியைச் சிறப்புற நடத்திப் பயன்பெற வேண்டுகின்றோம்.

சு. இராசவேலு,செயலர், தொல்லியல் கழகம்.

*************

உள்ளூர் செயலரின் அறிவிப்பு- கல்வெட்டுப் பயிற்சி பெற வருகின்ற நண்பர்களுக்கு

அன்புடையீர், வணக்கம்,

திருவண்ணாமலையில் வரும் 17 தேதிமுதல் 20 தேதி வரை நடைபெறவுள்ள கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அடுத்துள்ள டவுன் ஹால் நகராட்சி பள்ளியின் அரங்கில் நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்பிற்கு வருபவர்கள் செவ்வாய் காலை 9.30 மணிக்குள் பெயர்களைப் பதிவு செய்து 10 மணிக்கு வகுப்புக்கு வரவேண்டும்.

தங்குமிடம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டணம் செலுத்தாதவர்கள் நேரில் செலுத்தலாம்.

16 தேதி இரவு, விடியற்காலையில் வருபவர்கள் தங்குமிடத்திற்கு செல்ல கீழ்கண்ட கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 16 இரவு முழுக்க தொடர்பில் இருப்பார்கள்,

மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ள

1.ஸ்தனிஸ்லாஸ், பேராசியர் – 9444211597

2.ச.பாலமுருகன், செயலர், தி.மா.வ.ஆ.ந. – 9047578421

கல்வெட்டுப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் அனுப்ப இன்றே கடைசி நாள் விண்ணப்பம் இன்று இரவு 8 மணிக்குள் பதிவு செய்தல் வேண்டும். செயலர், தொல்லியல் கழகம்

*************

தொல்லியல்கழகம்– திருவண்ணாமலை 17.07.2018 முதல் 20.07.2018 முடியநடத்தும் தொல்லியல் பயிற்சி பாடத்திட்டம்

முதல் நாள் -17-07-2018

காலை 10.00 மணி-அறிமுகவுரை- ஒருங்கிணைப்பாளர்

முனை.சு. இராசகோபால்

1. வரலாற்றுச்சான்றுகளும்தமிழகக் கல்வெட்டுகளும்

முனை.சு. இராசகோபால்

2. தமிழ்-பிராமிஎழுத்துக்களும்தோற்றமும் காலமும்

பேரா.சு.இராசவேலு

3. அசோகன் பிராமி எழுத்துக்கள்

பேரா.சு.இராசவேலு

4. தமிழ்பிராமிகல்வெட்டுகளும்செய்திகளும்

முனை.சொ.சாந்தலிங்கம்

5. தமிழ்எழுத்தின்வளர்ச்சி

முனை.சு.இராஜகோபால்

*************

இரண்டாம் நாள் 18-07-2018

1. எழுத்துப்பயிற்சி

2. கிரந்தஎழுத்துக்களும்கல்வெட்டுக்களும்

முனை.சு. இராசகோபால்

3. பாண்டியர் கல்வெட்டுகளும் செய்திகளும்

முனை.சொ.சாந்தலிங்கம்

4. அகழாய்வுகளும்செய்திகளும்

முனை.திசுப்பிரமணி

5. சுவடிகள்

முனை.சு.இராஜகோபால்

*************

மூன்றாம் நாள் -19-07-2018

1. எழுத்துப்பயிற்சி

2. வட்டெழுத்தும் கல்வெட்டுக்களும்

முனை.சொ.சாந்தலிங்கம்

3. நடுகற்களும் சமூகமும்

முனை.ர.பூங்குன்றன்

4. தமிழகக்கட்டக்கலையும் சிற்பக்கலையும்

முனை.சு.இராஜகோபால்

5. சோழர் கல்வெட்டுகள்

பேரா.எ.சுப்பராயலு

*************

நான்காம் நாள் 20-07-2018

1. எழுத்துப்பயிற்சி

2. காசியல்

பேரா.ப.சண்முகம்

3. விஜயநகரர் கல்வெட்டுக்கள்

பேரா.எ.சுப்பராயலு

4. கல்வெட்டுகள் படியெடுத்தல் பயிற்சி

*************

(வகுப்புகள் அறிஞர்களின் வருகைக்கு ஏற்ப மாற்றத்திற்குரியது)

வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேனீர் / மதிய உணவு இடைவெளிகளுடன் நிகழும்

மாலை 5 மணிக்கு மேல் விருப்பப்பட்டவர்களுக்கு கல்வெட்டுகளைப்படிக்க பயிற்சிதரப்படும்

அன்புடன்

செயலர்

முனைவர் சு. இராசவேலு,

9444261503

*************

ஒருங்கிணைப்பாளர்

முனைவர் சு. இராசகோபால்

9445251089, 9500040685

தொல்லியல் கழகம்,தஞ்சாவூர்.