1. தொல்லியல் கழகம் 1991 ஆம் ஆண்டு தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் துறைகளில் புலமை சான்ற தொல்லியல் அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இத் துறையில் ஈடுபடும் இளைஞர்களையும் ஆர்வலர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் புதியதாக கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகள்,தொல்லியல் இடங்கள் மற்றும் தொன்மைச் சின்னங்கள் ஆகியவற்றை ஆய்வுலகம் அறியும் வகையில் அரையாண்டு இதழாக ஆவணம் என்ற இதழ் தொடங்கப்பட்டது.
2. அரையாண்டு இதழாக வெளிவந்த ஆவணம் மூன்றாம் இதழிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை வெளிவரும் ஆய்விதழாக மாற்றப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாற்றம் செய்யும் வகையில் கருத்தரங்குகள் நடத்துவதென திட்டமிடப்பட்டு முதல் கருத்தரங்கை 1993 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் ஒரு நாள் கருதரங்காக திருமதி மங்கயர்கரசி வீரராகவன் அவர்கள் உள்ளூர் செயலராக இருந்து சிறப்புற நடத்தினார் .
3. உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க இரண்டு நாள் கருதரங்கமாக மாற்றப்பட்டு சீரும் சிறப்புடனும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு இதுவரை 25 கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. 26 ஆவணம் இதழ்கள் வந்துள்ளன. இக் கழகத்தில் மொத்த உறுப்பினர்கள் 727. தமிழகத் தொல்லியல் கழகம் மேன்மேலும் வளர்ச்சி பெற ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். 2017ம் ஆண்டு தமிழகத் தொல்லியல் கழகம், ‘தொல்லியல் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் – 17 / 2017